Todaynewstamil

BREAKING NEWS

தந்தையின் வாள்வெட்டில் மகன் பலி மனைவி படுகாயம்

0 4

இரத்மலானை(ratmalana), மாளிகாவ வீதியில் உள்ள தனது வீட்டிற்குள் இன்று (11)காலை 11 மணியளவில் வாள் மற்றும் கத்திகளுடன் நுழைந்த தந்தை ஒருவர் தனது மகனைக் கொன்றுவிட்டு மனைவியை பலத்த வெட்டுக்காயத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கல்கிஸ்ஸ காவ்துறையினர் தெரிவித்தனர்.

இரத்மலானை வீதி இலக்கம் 166/A இல் வசிக்கும் லஹிரு லக்சான் (26) என்ற மகனையே தந்தை கொன்றுள்ளதுடன் கொலையாளியின் மனைவி (54) பலத்த வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாலைவேளை இடம்பெற்ற கொடூரம்

அதிகாலை 5.30 மணியளவில் கொலை நடந்துள்ளது, தந்தை வீட்டிற்கு அருகில் பூ பறிக்கும் போர்வையில் பல மணிநேரம் உளவு பார்த்தார், காலையில் தாய் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து மகனை கொடூரமாக தாக்கியுள்ளார்.

காயமடைந்த மகனையும் தாயையும் முச்சக்கரவண்டி மூலம் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், மகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் அயலவர் தெரிவித்தார்.

காவல்துறையினர் மேலதிக விசாரணை

சம்பவத்தின் பின்னர் கொலையாளியான தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Leave A Reply

Your email address will not be published.