Todaynewstamil

BREAKING NEWS

அரச ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

0 4

 அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் 1,000 ரூபா பங்களிப்புத் தொகையை அறவிட்டு தேசிய காப்புறுதி நிதியத்திற்கு வைப்பிலிடுவதற்கும், அதன்மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள விரிவான வசதிகளுடன் கூடிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தை 2025 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மருத்துவ காப்புறுதித் திட்டம்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மிகவும் கவர்ச்சிகரமான பயன்களுடன் கூடிய அரச ஊழியர்கள் மற்றும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மிகவும் இலகுவாக வழங்கப்படும் வகையில் மருத்துவ காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக (09.09.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு,

ஓய்வூதியர்கள், அரச ஊழியர்

மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரித்தல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மிகவும் கவர்ச்சிகரமான பயன்களுடன் கூடிய அரச ஊழியர்கள் மற்றும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மிகவும் இலகுவாக வழங்கப்படும் வகையில் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2024.08.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரசதுறையிலுள்ள அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் 1,000 ரூபா பங்களிப்புத் தொகையை அறவிட்டு தேசிய காப்புறுதி நிதியத்திற்கு வைப்பிலிடுவதற்கும், அதன்மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள விரிவான வசதிகளுடன் கூடிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தை 2025 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




Leave A Reply

Your email address will not be published.