Todaynewstamil

BREAKING NEWS

93 வயதில் பிரபல மூத்த நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

0 3

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். இவர் தனது திரை வாழ்க்கையை 1960களில் துவங்கினார்.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானா ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் டார்த் வேடர் கதாபாத்திரத்துக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார்.

மேலும் 90ஸ் களில் வெளிவந்த லைன் கிங் படத்தில் முஃபாஸா கதாபாத்திற்கும் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸின் குரல் தான் பயன்படுத்தப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு தான் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் எனும் ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற நடிகரான ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் நேற்று செப்டம்பர் 9ஆம் தேதி மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 93. ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸின் மரண செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.