Todaynewstamil

BREAKING NEWS

5 நாட்களில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0 5

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

முதல் முறையாக விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி இப்படத்தில் அமைந்தது. மேலும் பல ஆண்டுகளுக்கு பின் யுவன் இசையில் தளபதி விஜய் நடித்தார். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில இடங்களில் கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வசூல் ரீதியாக GOAT படம் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்கள் வசூல்

அதன்படி, GOAT திரைப்படம் வெளிவந்து 5 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 292 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் செய்யப்போகும் சாதனைகளை தொடர்ந்து பார்ப்போம்.


Leave A Reply

Your email address will not be published.