நேற்று விவாகரத்து அறிவிப்பு, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெயம் ரவி… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஜெயம் ரவி
தமிழ் சினிமா நடிகர்களில் Haters இல்லா நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
இவர் நடிப்பில் வெளிவந்த முதல் படமான ஜெயம் படம் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
பின் எம்.குமரன் S/o மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.
கடைசியாக இவரது நடிப்பில் சைரன் படம் வெளியாகி இருந்தது, அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.கடந்த 2009ம் ஆண்டு ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், மூத்த மகனை டிக் டிக் டிக் படத்தில் நடிக்க வைத்திருந்தனர்.
நேற்று நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டதாக அறிவித்தார். இன்று நடிகர் ஜெயம் ரவிக்கு 44வது பிறந்தநாள், தற்போது அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஒரு படத்துக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறும் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு ரூ. 75ல் இருந்து ரூ. 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.