தமிழில் பாண்டவர் பூமி என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார்.
தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த அருண் விஜய் என்னை அறிந்தால் படம் வில்லனாக அமோக வரவேற்பை பெற்று தந்தது. இதன்பின், தடம், குற்றம் 23, செக்க சிவந்த வானம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, மற்ற நடிகர்களுடன் படங்களில் நடிக்க கேட்டு வரும் வாய்ப்பை அருண் மறுத்து வந்தார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் அவர் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கக் கேட்டு அருண் விஜய்யை அணுகியிருக்கிறார்.
தனுஷ் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரம் பிடித்து போனதால் அந்த படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்புக்கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிக்க அருணுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்திருக்கும் வணங்கான் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து, தற்போது திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.