தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தனது Axess Film Factory தயாரிப்பு நிறுவனம் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் தயாரிப்பாளர் டில்லி பாபு.தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தனது Axess Film Factory தயாரிப்பு நிறுவனம் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் தயாரிப்பாளர் டில்லி பாபு.
இவர் தயாரிப்பில் ராட்சசன், மரகதநாணயம், ஓ மை கடவுளே, இரவுக்கு ஆயிரம் கண்கள், பேச்சிலர் போன்ற தரமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், Axess Film Factory தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான டில்லி பாபு இன்று அதிகாலையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 50.
இவருடைய மரணம் திரையுலகில் உள்ள பலரும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.