தபால் மூல வாக்களிப்பின் போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு பல அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே அவ்வாறு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டின் பிரதானி சட்டத்தரணி திலின பெர்னாண்டோவினால் தேர்தல் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (தேர்தல்கள்) ஆகியோரிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவில் செல்வாக்கு செலுத்துவது தேர்தல் விதிகளை மீறும் செயல் என்பதால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.