Todaynewstamil

BREAKING NEWS

எயார் கனடா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0 3

கனடாவின் முதல்நிலை விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமான சேவை தனது பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எயார் கனடா விமான சேவையை பயன்படுத்து பயன்படுத்தும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வழமையை விடவும் முன்கூட்டியே விமான நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

விமானபம் புறப்படுவதற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய ஆக குறைந்த நேரம் 60 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 45 நிமிடங்களுக்குள் பயணிகள் விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்ற அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்பொழுது இந்த அறிவிப்பு மேலும் பதினைந்து நிமிடங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வழமையை விடவும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணப் பொதிகளையும் பயணிகளின் ஆவணங்களையும் சரிபார்த்து சுமூகமான முறையில் பயணங்களை முன்னெடுப்பதற்காக இவ்வாறு முன்கூட்டியே பயணிகள் விமான நிலையத்திற்கு செல்வது அவசியமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் செக்இன் செய்துகொள்ள விரும்பும் பயணிகள் இவ்வாறு முன்கூட்டியே விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

விமான பயணம் செய்யும் நேரத்திற்கு நான்கு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பயண பொதிகளை ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எயார் கனடா விமான சேவையின் விமானிகள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.