கடந்த 5ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது GOAT. தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார்.
முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் பட்டையை கிளப்பி வருகிறது. மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள GOAT, இதுவரை உலகளவில் ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
GOAT படத்தில் மகன் விஜய்யின் ஜோடியாக நடித்திருந்தவர் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் தனது திரையுலக பயணத்தை பாலிவுட் சினிமாவில் இருந்து துவங்கினார். பின் தெலுங்கில் HIT: The Second Case இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதை தொடர்ந்து மகேஷ் பாபு உடன் இணைந்து குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி, இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 40 லட்சம் சம்பளமாக வாங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது.