கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் துணைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் போலந்து நிறுவனத்துடன் பேச்சு நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டுக்களின் தயாரிப்பை துரிதப்படுத்துவதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய இணையக்கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் பொறுப்பு எம்ஆர்பிகள் தேல்ஸ் டிஐஎஸ் ஃபின்லாந்து ( Thales DIS Finland Oy)என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தயாரிப்புக்கள் கால தாமதமாவதால், இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றுக்கடவுச்சீட்டுகள் இல்லாமையே இந்த நிலைமைக்கான காரணமாகும்.
இந்தநிலையில் புதிய இ-கடவுச்சீட்டுகள் 2024 அக்டோபர் மாத இறுதியில் இலங்கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அவை ஏற்கனவே பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுக்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.