வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்து 6 மாதம் ஆன நிலையில், சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த நிலையில் இது குறித்து வெளியில் தெரியப்படுத்தக் கூடாது என குறித்த சந்தேகநபர் மிரட்டியதாகவும், தற்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மாவட்ட செயலக சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர், வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்தவர் எனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.