Todaynewstamil

BREAKING NEWS

புகலிடம் கோருவோர் மீது தாக்குதல்… பிரித்தானியருக்கு 9 ஆண்டுகள் சிறை

0 5

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் தங்கியிருந்த ஹொட்டல் மீது நெருப்பு வைத்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்தில் கைதான நபர்களில் நீண்ட கால தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

ஆகஸ்டு 4ம் திகதி Rotherham அருகே அமைந்துள்ள ஹொட்டலின் வாசலில் குப்பைத்தொட்டி ஒன்றில் 27 வயதான Thomas Birley என்பவர் நெருப்பு வைத்துள்ளார். இது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கை என குறிப்பிட்டு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நெருப்பு வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் மீண்டும் கட்டைகளை நிரப்பி Thomas Birley நெருப்பு வைத்துள்ளதாக சட்டத்தரணி Elisha Kay தெரிவித்துள்ளார்.

கலவரத்திற்கு பயந்து ஹொட்டல் ஊழியர்களும் புகலிடம் கோருவோரும் அப்போது உள்ளே பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, நடந்த சம்பவத்தால் தீயில் கருகி மரணமடையக் கூடும் என ஹொட்டல் ஊழியர்கள் அஞ்சியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வன்முறை, சூறையாடல், நெருப்பு வைத்தல் உள்ளிட்ட செயல்களும் முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 29ம் திகதி மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இணையத்தில் பரவிய தவறான தகவலே கலவரத்தில் முடிந்தது. 

இதில் நாடு முழுவதும் 1300 பேர்கள் கைது செய்யப்பட்டதுடன், தற்போது 200 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.