கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவரை படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில், கொச்சியில் வைத்து காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, நடிகைகள் பாதுகாப்பு குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனாலும், அந்த அறிக்கை சுமார் நான்கரை ஆண்டுகளாக வெளியாகவில்லை.இதைத்தொடர்ந்து கடந்த வாரம் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பலர் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை சவுமியா பாலியல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகளை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குநர் கட்டுப்பாட்டில் இருந்தேன்: அதில், எனக்கு 18 வயது, கல்லூரியில் முதல் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, சினிமா பற்றி என் பெற்றோருக்கு தெரியாது, அந்த சமயத்தில் தமிழ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் மற்றும் அவரது மனைவியுடன் படத்தில் நடிப்பதற்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு நான் சென்றேன். படத்தில் நடிக்கும் போது நான் முழுக்க இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருந்தும் அவரின் மிரட்டலுக்கும் நான் பயந்தும் இருந்தேன். முத்தம் கொடுத்தார்: ஒருநாள்,அந்த இயக்குநரின் மனைவி, வீட்டில் இல்லாதபோது என்னை அவரது மகள் என்று கூறி முத்தம் கொடுத்தார். என்னால் அப்போது அதை வெளியில் சொல்லமுடியவில்லை. பின் என்னை அவர் பலமுறை பலாத்காரம் செய்தார். கல்லூரி படித்த காலத்தில் ஒரு ஆண்டுகளுக்கு மேல் இது நடந்தது. அப்போது நான் இயக்குநரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன். அந்த இயக்குநர் என்னை அவரது மகள் என்றும் என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறி என் மூளையை மொத்தமாக குழப்பிவிட்டார். இந்த அவமான உணர்வில் இருந்து வெளியில் வர எனக்கு 30 ஆண்டுளாகியது. தனக்கு நேர்ந்த துயரம் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தேன் தன் பாதுகாப்பை மனதில் வைத்து அந்த இயக்குநரின் பெயரை பகிரவும் இல்லை என்று நடிகை சவுமியா தெரிவித்துள்ளார்.