தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான ஒன்ராறியோ அரசாங்கத்தின் சட்டம்: வழங்கப்பட்டுள்ள உறுதியான தீர்ப்பு
நாட்டில் சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததை அங்கீகரிக்கும் சட்டத்தை உருவாக்க ஒன்ராறியோ அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில பகுதிகளை உறுதிப்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த சட்டம், ஒன்ராறியோவின் சிங்கள சமூகத்தின் சுதந்திரமான கருத்து மற்றும் சமத்துவ உரிமைகளை மீறவில்லை என்று கூறியுள்ளது.
எவ்வாறாயினும், கீழ் நீதிமன்றத்தின் சட்டத்தை “கல்வி” என்று வகைப்படுத்துவதை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்கவில்லை.
உள்நாட்டு போர்
இந்தநிலையில், ஒன்ராறியோ மாகாணத்திற்குள் மட்டுமே அனுசரிக்கப்படும், மனித உரிமைகள், பன்முகத்தன்மை மற்றும் பன்முக கலாசாரத்தின் மதிப்புகள் மூலம் உள்ளூர் சமூகங்களின் அனுபவங்களை அங்கீகரிக்க சட்டம் இயற்றலாம் என்று நீதிபதி ஜே. மைக்கேல் ஃபேர்பர்ன் எழுதிய ஒருமனதான தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மே 18ஆம் திகதியுடன் முடிவடையும் வாரத்தை “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” என்று பிரகடனப்படுத்த யோசனை முன்மொழியப்பட்டது.
இதன்போது, ஒன்ராறியர்கள் உலகெங்கிலும் உள்ள தமிழ் இனப்படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைகள் பற்றி அறிய ஊக்குவிக்கப்படுவார்கள் என்ற வகையில், ஒன்ராறியோ சட்டமன்றம் யோசனைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது,
2021 இல், இந்த யோசனைக்கு அரச ஒப்புதல் வழங்கப்பட்டதுடன் அதற்கு அடுத்த ஆண்டில் “ இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலை” மற்றும் மே 18 ஐ தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் ஒரு பிரேரணையை நாடாளுமன்றமும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இரண்டாவது மனு, லாரன்சியன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைக்கான சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் சிங்கள துணைப் பேராசிரியர் நெவில் ஹே வகேயினால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மனுக்களும், இனப்படுகொலை சட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியற்றது என்றும் அதைச் சட்டமாக்குவது ஒன்ராறியோ அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் குற்றம் சாட்டின.
எனினும், இந்த மனுக்களை விசாரணை செய்த கீழ் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஒன்ராறியோ அரசாங்கத்திற்கு இந்த சட்டத்தை இயற்ற உரிமை உண்டு என்றும் சட்டம், சாசன உரிமைகளை மீறவில்லை என்றும் முடிவு செய்தார்.
இதனையடுத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பு மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் பெரும்பாலும் கீழ் நீதிமன்றத்தின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.