ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யா புதிய தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் தற்போதைய புதிய நடவடிக்கையாக இரவோடு இரவாக ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 58 ராக்கெட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் 11 பிராந்தியங்களில் உள்ள வான் தடுப்பு சாதனங்கள் ரஷ்யாவின் ராக்கெட் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு அதன் டெலிகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகங்கள் நாடாளுமன்றத்தின் அருகில் விழுந்து கிடக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனின் மத்திய கீவ் நகரம் சோவியத் கால நெட்வொர்க் மற்றும் மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் பாதுகாக்கப்படுவதால், இப்பகுதியில் ரஷ்ய ராக்கெட்கள் அல்லது ஆளில்லா விமானங்கள் நுழைவது அரிதாக பார்க்கப்படுகிறது.