Todaynewstamil

BREAKING NEWS

விஜய் சேதுபதியின் அதிரடியாக அடுத்தடுத்த லைன் அப்.. வேற லெவல் அப்டேட்

0 120

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் என தகவல் வெளிவந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்போகிறார் என அறிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் படத்தை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் விஜய் சேதுபதி. இருவரும் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

இதன்பின் இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய படங்களை இயக்கி இயக்குனர் ரவிகுமாருடன் கைகோர்க்கவுள்ளாராம். மேலும் இயக்குனர்கள் கார்த்திக் சுப்ராஜ், மீண்டும் மகாராஜா இயக்குனர் நித்திலனுடன் இணைகிறாராம் விஜய் சேதுபதி.

இப்படி தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தன்னுடைய படங்களை கமிட் செய்து வைத்துள்ளாராம் விஜய் சேதுபதி. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.