Todaynewstamil

BREAKING NEWS

வவுனியாவில் வாக்குச்சீட்டை முகநூலில் பகிர்ந்த அரசியல் பிரமுகர் : எழுந்துள்ள சர்ச்சை

0 7

 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கான வவுனியா மாவட்ட நிதிப்பொறுப்பாளருமான ஒரு அரசியல் பிரமுகர் தனது முகநூலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டை பொது வேட்பாளருக்கு புள்ளடி இடப்பட்டவாறு பகிர்ந்துள்ளார்.

நேற்றையதினம் (06) இரண்டாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் வாக்குச் சீட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள செயல்பாடு என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடமும் தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.