Todaynewstamil

BREAKING NEWS

சஜித்தை ஆதரிக்கும் சுமந்திரன் குழு! தமிழரசு கட்சி அல்ல: தமிழ் எம்.பி வெளிப்படை

0 10

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது சுமந்திரன் குழு என்றாலும் தமிழரசுக் கட்சி அல்ல என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று (06) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எமது தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி நிற்கின்றோம்.

அவர் தேர்தலிலே வெற்றி பெறப் போவதில்லை.ஆனால் தமிழ் மக்களை ஒன்றிணைக்கக்கூடிய செயற்றிட்டமாக இது அமைகின்றது 

ஆகவே அனைத்து தமிழர்களும் தமிழர்களாக சிந்தித்து நமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.